Skip to main content

Posts

Showing posts from May, 2019

அஸ்பெஸ்டாஸ் மனிதன் - ஸ்டீபன் லீகாக்

அஸ்பெஸ்டாஸ் மனிதன் நான் அதை உள்நோக்கத்துடன்தான் செய்தேன் என்பதை துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறேன். ஒருவேளை கொஞ்சம் பொறாமையாலும் இருக்கலாம்.

அஸ்பெஸ்டாஸ் மனிதன் - பின்புலம்- குறிப்பு

பொதுவாக ஒரு சூழலின் அபத்தங்களை அச்சூழலிலிருந்து முற்றிலும் அந்நியமான ஒரு நபரே எளிதில் சுட்டிக்காட்ட முடியும்.

தக்கவைக்கும் இயந்திரம் - பிலிப் கே டிக்

தக்கவைக்கும் இயந்திரம் டாக்டர் லேப்ரின் கண்களை மங்கலாக மூடியவாறே தன் புல்வெளி நாற்காலியில் சாய்ந்தார். போர்வையை முழங்காலுக்கு மேலே இழுத்துவிட்டுக்கொண்டார். ”அதாவது?” நான் பேச்சு கொடுத்தேன்.

முழுக் கோடையும் ஒரே நாளில் - ரே பிராட்பரி

முழுக் கோடையும் ஒரே நாளில் ”தயாரா?” ”தயார்.”     ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார் !” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து மறைந்திருக்கும் சூரியனை எட்டிப் பார்க்க முயல்வதைப் போல. மழை பெய்தது. ஏழு வருடங்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆயிரமாயிரம் நாட்களாக ஒரு முனையிலிருந்து மறுமுனையை தனது முரசொலியாலும் வேகமான பாய்ச்சலாலும் இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்கிறது மழை. இனிய பளிங்குபோன்ற மழைத்தாரைகளின் பொழிவும் புயல்காற்றின் மோதல்களும் பலமாக இருந்த அந்த தீவின்மேல் கடலின் பேரலைகள் வந்துசெல்கின்றன. மழையால் நசுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனங்கள் அங்குள்ளன. அவை மீண்டும் நசுக்கப்படுவதற்காக ஆயிரம்முறை வளர்கின்றன. இப்படியாக, வீனஸ் கிரகத்தில் வாழ்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது, விண்வெளிக்கலன் மூலம் இந்த மழைக் கிரகத்திற்கு வந்து நாகரிகத்தை உருவாக்கி, தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் ம...

All Summer in a Day - குறிப்பு

எம் எஸ் அவர்களின் மொழியாக்கத்தில் ‘ அமைதியான ஒரு மாலைப்பொழுதில் ’ ( “In a Season of Calm Weather” ) வாசித்தபோதுதான் ரே பிராட்பரியை முதன்முதலாக கேள்வியுற்றேன் . வடிவம் மற்றும் தரிசனம் சார்ந்து நான் வாசித்த மிகச் சிறந்த கதைகளுள் ஒன்று அக்கதை . அப்போதிருந்தே அந்த பெயரின்மீது ஒரு கவனம் இருந்தது . இப்போது இவரது ‘All summer in a Day' எனும் சிறுகதையை மொழியாக்கம் செய்ய முயன்றுள்ளேன் . இவர் பொதுவாக அறிவியல்புனைவு (Science Fiction) எழுத்தாளர் என அறியபட்டாலும் , இவர் அதை மறுத்து , தன்னை பிராதானமாக மிகைக்கற்பனை (Fantasy) எழுத்தாளர் என்றே கூறிவந்துள்ளார் . நான் எடுத்துக்கொண்ட இக்கதையும் கூட அறிவியல்மிகைக்கற்பனை என்ற வகைமையில் வர வாய்ப்புள்ளது . இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்க்கான காரணம் இந்த ஆசிரியரையும் , வகைமையையும் கவனப்படுத்தும் நோக்கில் மட்டுமே . முதல்நோக்கில் எளிய கதைபோன்று தோற்றமளித்தாலும் சூரியன் எனும் ஆதி படிமத்திற்கு வாசகன் அளிக்கும் அர்த்தங்கள் மூலம் விரியக்கூடியது இக்கதை . மொழியாக்கம்:  https://p...

பிரபஞ்ச மெளனம் - குறிப்பு

அன்பின் ஜெ , இம்முறை ஊட்டி முகாமில் எனக்கு முக்கிய அறிமுகமாக இருந்தது அறிவியல் புனைவுதான் . அதன் வரலாறு , இலக்கணம் , எல்லைகள் , சாத்தியங்கள் என சுசித்ரா மற்றும் கமலக்கண்ணன் அரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது . அறிவியல் கதைகள் ஆங்கிலத்தில் இருப்பதாலும் அதன் அறிவியல் தகவல்சார்ந்த பின்னணி காரணமாகவும் வாசிப்பு சவால் கொண்டதாக இருப்பதாக சிலர் குறிப்பிட்டனர் . நான் சுசித்ரா பகிர்ந்திருந்த கதைகளில் டெட் சியாங்கின் மூன்று கதைகளை வாசித்திருந்தேன் . எனக்கு மூன்றுமே ஆர்வமூட்டும் வாசிப்பாகவே இருந்தது .  அவற்றுள் Great Silence கதை ஒப்புநோக்க சிறியது . எனவே வாசிக்கும்போதே அதை மொழிபெயர்க்க முயற்சித்தாலென்ன எனத் தோன்றியது . என்னளவில் Exhalation கதையே மூன்றில் முதன்மையானது . இருப்பினும் முதல் மொழியாக்க முயற்சி காரணமாக Great Silence கதையை எடுத்துக் கொண்டேன் . Great Silence கதை ஒரு தவிர்க்க முடியாத சூழியல் கேள்வியை கேட்பதாகத்தான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன் . ஆனால் அது வெறும் உயிரின அழிவைப் பற்றி ...

பிரபஞ்ச மெளனம் - டெட் சியாங்

பிரபஞ்ச மெளனம் மனிதர்கள் புவிக்கப்பாலான உயிரினங்களின் இருப்பை கண்டறிய அரெசிபோவை 1 பயன்படுத்துகின்றனர். தொடர்பு வைத்துக் கொள்வதற்கான அவர்களின் விழைவு மிகவும் வலுவானது. எனவே அண்டம் முழுக்க கேட்கும் திறனுள்ள செவியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் நானும் எனது கிளிக் கூட்டமும் இங்கேயே இருக்கிறோம். எங்கள் குரல்களை கேட்பதற்கு அவர்கள் ஆர்வம் காட்டாதது ஏன்? மனிதரல்லாத உயிரனமான நாங்கள், அவர்களுடன் தொடர்புகொள்ளும் திறனுடையவர்கள். மிகச்சரியாக மனிதர்கள் தேடிக்கொண்டிருப்பது எங்களைத்தான் அல்லவா? இந்த பிரபஞ்சம் மிக விரிந்தது. எனவே சிந்திக்கும் உயிரினம் நிச்சயம் இங்கு பலமுறை தோன்றியிருக்க வேண்டும். இந்த பிரபஞ்சம் மிக நீண்ட வயதுடையதும் கூட. எனவே தொழில்நுட்ப வசதி வாய்த்த ஒரு உயிரினத்துக்காவது அனைத்து விண்மீன் பேரடைகளுக்கும் (கேலக்ஸிகளுக்கும்) விரிவடையும் அளவுக்கு காலம் இருந்திருக்கும். இருப்பினும் பூமியைத் தவிர வேறெங்கும் உயிர்கள் இருப்பதற்கான குறிகள் இல்லை. மனிதர்கள் இதை ஃபெர்மி முரண்பாடு என்கின்றனர். ஃபெர்மி முரண்பாடுக்கு 2 அளிக்கப்படும் ஒரு விளக்கம் என்னவென்றால், சிந்திக்க...