Skip to main content

Posts

Showing posts with the label வெள்ளிமலை

ஓவியத்தைக் கண்டடைதலும் தன்னைக் கண்டடைதலும்

வெள்ளிமலை ஓவியப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனுபவம் குறித்த என் கடிதம்:  ஓவியத்தைக் கண்டடைதல் -  https://unifiedwisdom.guru/203869 ரஞ்சனியின் கடிதம்: தன்னைக் கண்டடைதல் -  https://unifiedwisdom.guru/203921 வகுப்பு முடிந்து வந்த பின்பு வாட்ஸ்அப் குழுமத்தில் ஆசிரியர்கள் ஒரு சவாலை அறிவித்தனர். தொடர்ந்து 21 நாட்களுக்கு தினம் ஓர் ஓவியம் வீதம் தங்களுக்கு விருப்பமான வகையில் மலர்களை வரைய வேண்டும். ரஞ்சனி உட்பட குழுமத்தில் உள்ள பலரும் இந்த சவாலில் உற்சாகமாகப் பங்கெடுத்திருக்கிறார்கள். நான் வேடிக்கைப் பார்த்து கைத்தட்டுவதோடு சரி. தினமும் காலையில் மலரோவியங்களில் விழித்தெழுவதும் நன்றாகத்தான் உள்ளது. ஓவியங்களைப் பார்க்க: குழுமத்தின் இன்ஸ்டா பக்கம்:  https://www.instagram.com/nithyavanamartists?igsh=NWxwcHc4cW4wc2Yx&utm_source=qr ரஞ்சனியின் வலைப்பூ:  https://ragsketches.blogspot.com/

நீலக்குறுநிலவு

"இப்ப ஒரு தவிப்புக் குரல் கேக்குதில்லையா.. இத கவனிச்சு பாருங்க, கொஞ்சம் கொஞ்சமா இந்தக் குரலோட ஸ்ருதி ஏறிட்டே போகும். அதுக்கப்றம் ஒரே சொல், இல்லயில்ல ஒரு இரட்டை சொல் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கும், சிலப்பம் நாள் முழுக்கக் கூட கேக்குறதுண்டு. குறிப்பா இரவு நேரத்துல கேக்க ஆரம்பிச்சா அப்றம் நிக்காது. நேத்து நைட் எங்க கிணத்துக்குடில் பக்கம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. இது இப்டி பித்து பிடிச்ச மாதிரி ராத்திரி முழுக்க கத்திட்டே இருக்குறதால இதுக்கு Brain fever Bird ன்னு பேரு" என்று சுசித்ரா அக்காவிடம் நித்யவனத்தின் லைப்ரரி ஹால் வாசலில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். கோடை காலம் ஆதலால் விடியற்காலையின் எஞ்சியிருந்த குளிரும் விரைவாக அகன்று நன்றாக வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. "ஓ இன்ட்ரெஸ்டிங் நேம்", சுசித்ரா அக்கா சிறிது நேரம் செவிகூர்ந்தார், "ஆமா ரொம்ப தொந்திரவான குரல்தான். மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் ஒரு அழைப்பு அல்லது கட்டளையிடப்படும் ஒரு ஆணை மாதிரி கேக்குதில்லையா" "ஆமாக்கா. சரியா சொன்னீங்க. இந்தக் குரல்ல இருக்குறது அழைப்புக்கான தவிப்பா இல்ல...