Skip to main content

Posts

Showing posts with the label plants

மான் செவி கள்ளி

இரண்டு வாரங்களாக குறிப்பிடத்தக்க பயணங்கள் எதுவும் அமையாததால் மனதில் ஒருவித தவிப்பு. எனவே  இன்று மாலை குறைந்தபட்சம் ஒரு புதிய இடத்தையாவது கண்டடைவோம் என கூகுள் ஆண்டவரிடம் தேடினேன். வீட்டிலிருந்து ஒருமணி நேர தொலைவில் ஆதியூர் அருகே மிகப்பெரிய பரப்பளவில் குளம் ஒன்று இருந்தது. நீரும் பசுமையும் இருப்பதுபோல் ஆண்டவர் படம் காட்டினார். வண்டியை விட்டோம். சென்று பார்த்தால் குளத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் முள் மரங்களாலும் தாவரங்களாலும் ஆக்ரமித்து இருந்தது. பாதி அளவு உள்ளே சென்று பார்த்தோம். பார்த்தவரை நீர் இல்லை. பெரிய குளம் என்பதால் மறுபக்கத்தில் இருக்கலாம் என மனதை தேற்றிக் கொண்டோம். செம்போத்தில் துவங்கி பஞ்சுருட்டான், வால்காக்கை என வழக்கமான பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். வானில் உயரத்தில் எந்த அலட்டலுமில்லாமல் வேட்டையாடி பறைவையை (raptor) போல பறந்த பறவையை கவனித்தேன். பாம்புத்தாரா (Darter). அதன் நீள் கழுத்து தெளிவாகவேக் காட்டியது. அதிக உயரத்தில் பறந்து இன்று தான் பார்க்கிறேன். எப்போதும் நீருக்குள்ளோ நீரருகிலோ பார்த்தப் பறவை. அருகில் நீர்நிலை தேடி பறந்திருக்க வேண்டும். திரும்பும் வழியில...

எரிந்தணைந்த மஞ்சரி

  பேய்மிரட்டி வானைநோக்கி எரிந்தணைந்தது போல் காட்சியளித்தது அந்த மலர்க்கொத்து.  காலைநடையின் போது சாலையோர புதர்ச்செடிகளை நோட்டம் விடுவது வழக்கம். தொட்டால் உதிர்ந்து விடுமோ எனத் தோன்றியது. மலர்களா விதைகளா என்ற ஆர்வத்தில் அருகில் சென்று பார்த்தேன். தொட்டுப் பார்த்ததில் திடமாகவே இருந்தது. இரண்டு வாரம் முன்னர் இச்செடியில் ஊதா நிறப் பூக்கள் இருந்ததாக நினைவு. ஆனால் சுத்தமாக நிறங்களை உதிர்த்துவிட்டு சருகுபோல எஞ்சும் இந்த நிலையே என் கவனத்தை மேலும் ஈர்த்திருக்கிறது. படம் எடுத்து அகில உலக டீச்சரிடம் விவரம் கேட்டேன். உடனடியாக விரிவான பதில். பேய்மிரட்டி என்றும் மூலிகை மருந்தாகவும் கொசுவிரட்டும் தூபமாகவும் பயன்படுத்தக் கூடிய செடி என்றார். தாவரவியலில் அடுக்களாக அமைந்த மலர்க்கொத்தை மஞ்சரி என்றழைக்கிரார்கள். ஆங்கிலத்தில் inflorescence. சில ஆண்டுகளுக்கு முன்பு இச்செடி ஊர்பகுதிகளில் அரிதாக இருந்ததாகவும் இதைத் தேடி ஆனைமலைப் பகுதிகளில் அலைந்திருப்பதாகவும் டீச்சர் கூறினார். பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்கால் வழி சமநிலத்திற்கு விதைகள் பரவி இப்போது எங்கும் காணக்கிடைக்கிறதாம். பேய்களை விரட்ட மலைமீதிருந்...